இன்றைய வானிலை அறிக்கை! | Virakesari.lk

Published by R. Kalaichelvan on 2020-01-21 08:39:06 நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் […]

எமது பிரதேசத்திற்கு ஒவ்வாத கொங்கரீட் வீட்டை தடுத்து நிறுத்துவோம் – மஸ்தான் தமிழ் மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்  – செல்வம் எம்பி 

எமது பிரதேசத்திற்கு ஒவ்வாத கொங்கிரீட் வீடுகளை காட்டி ஏழ்மையில் உள்ள எமது மக்களை மஸ்தான் எம்.பி ஏமாற்ற பார்க்கின்றார். அதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினரால் கொங்கிரீட் வீடுகள் வன்னியில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே பொருத்து வீடுகளை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் கொண்டு வருகின்ற […]

பிரதமரை அலரிமாளிகையில் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தை நிறுவன பிரதானிகள்

(இராஜதுரை ஹஷான்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு பங்குச்சந்தை  நிறுவன பிரதானிகள் இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதகேடந்த நான்கரை வருட காலமாக  கொழும்பு பங்குச்சந்தை  சடுதியாக வீழ்ச்சியடைந்தமையினால் பங்குச்சந்தை நிறுவனங்கள் மூடப்பட்டன .இதன் காரணமாக   பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து  பாரிய நெருக்கடிகளுக்கு  உள்ளாகியுள்ளார்கள்.  என பங்குச்சந்தை  நிறுவன பிரதானிகள்  பிரதமரிடம் எடுத்துரைத்தார்கள். பல்வேறு  புதிய சட்ட நெறிப்படுத்தலினால் பங்குச்சந்தைகள் இவ்வாறு  வீழ்ச்சியடைந்துள்ளதாக  கொழும்பு  பங்குச்சந்தை பிரதானிகள் சங்கத்தினர் இதன்போது பிரதமருக்கு தெளிவுப்படுத்தினர். ஐக்கிய தேசிய […]

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பகிடிவதை தாக்குதலில் இரு மாணவர்கள் படுகாயம் 

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பகிடிவதை தொடர்பில் இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கியதில் முதலாம் வருட மாணவர்கள்  இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் . குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை (20) பகல் […]

மேன்முறையீட்டு நீதிமன்றில் பதில் தலைமை நீதிபதியானார் நவாஸ்

மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதியாக, அந்த நீதிமன்றின் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். Source link

ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்!

எத்தியோப்பியால் இடம்பெற்ற கிறிஸ்தவ மத நிகழ்வொன்றின்போது மரக் குற்றிகளால் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கட்டமைப்பொன்று எதிர்பாரத விதமாக இன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய கோண்டரில் நகரில் இடம்பெற்ற திம்காட் என்ற குறித்த கிறிஸ்தவ திருவிழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டதாக எத்தியோப்பியன் செய்தி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. […]

கற்பிட்டியில் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்ட கடலாமை 

கற்பிட்டி தலவில் கடற்கரையோரப்பகுதியில் இன்று மாலை ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கரையொதிங்கிக் காணப்பட்ட கடலாமையை அவதானித்துள்ளார்.  இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு தகவலை வழங்கிய நிலையில். குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட கடலாமையை பார்வையிட்டுள்ளனர். ஆமையின் தலை மற்றும் முதுகுத் தண்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். குறித்த ஆமையை இறைச்சிக்காக  பிடிப்பதற்கு மண்டாலினால் தாக்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.  […]

பஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்புவாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று  நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.   இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக் காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான […]

இந்தியாவின் அக்கறைகளும் இலங்கையின் இணக்கப்போக்கும் : அஜித் டோவால் கோத்தாபயவிற்குக் கூறியது என்ன?

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கடந்த சனிக்கிழமை இலங்கைக்குக் குறுகியதொரு விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் பாதுகுhப்பு ஆலோசகர் அஜித் டோவால், இந்தியாவும் இலங்கையும் மாலைதீவும் கடற்பரப்பு விழிப்புநிலை திட்டமுறையை ((Maritime Domain Awareness – MDA) மீள்பரிசீலனை செய்து, அதை மேலும் மேம்படுத்தி பிராந்தியத்தின் ஏனைய நாடுகளையும் அவதானிகளாக உள்ளடக்க வேண்டியது மிகவும் முக்கயமானதென்று இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குக் கூறியிருக்கிறார். Source link