மத்திய வங்கிய பிணைமுறி மோசடியை மறைக்க ஐ.தே.க. முயற்சி –  டி.யூ. குணசேகர 

0
15


(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிணைமுறிமோசடி தடயவியல் கணக்கறிக்கையை முன்னிலைப்படுத்தி மத்திய வங்கிய பிணைமுறி மோசடியை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கின்றது. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் முடிவடைந்திருக்கின்றன. மோசடி காரர்களுக்கு எதிராக சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணைமுறி மோசடி தொடர்பான கோப்குழுவின் தடயவியல் கணக்கறிக்கை குறித்து பூரண அறிவில்லாதவர்கள் அதுதொடர்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பேசக்கூடாது. அதேபோன்று இந்த தடயவியல் அறிக்கையை அரசியல்வாதிகள் யாரும் தங்களுக்கு தேவையான முறையில் அரசியலாக்கவும் முற்படக்கூடாது. இதுதொடர்பாக முறையான விசாரணை இடம்பெற்று மக்களுக்கு உண்மை நிலையை அறிந்துகொள்ள இடமளிக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறுனார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here