பொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா

0
23


Published by R. Kalaichelvan on 2020-02-26 20:59:01

(செ.தேன்மொழி)

பொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை இந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தையும் தண்டனையையும் பலப்படுத்தாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் , இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவதானம் செலுத்தி நடவடிக்கைஎடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் கூறியதாவது,

தற்போது பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதனடிப்படையிலே கடந்த மாதம் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காணொளியொன்று முகப்புத்தகங்கள் ஊடாக வெளிவந்திருந்தன. இது தொடர்பில் பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்ததுடன், நாங்கள் முறைபாடை அளிக்க சென்றபோது பொலிஸார் ஏற்கனவே அது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

காணொளியை பார்க்கும் போது சம்பந்தப்பட்ட சிறுமியின் உருவர் தெளிஜவாக தெரிவதுடன் , சிறுமி நன்கு அறிந்த ஒருவராலேயே அவர் துழ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றார் என்று தெரிகின்றது.

அதேவேளை குறித்த சிறுமிக்கு தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாக விளக்கமில்லை. இன்று சமூகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெருமளவில் இவ்வாறே இடம்பெறுகின்றன. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக கூட அறிந்துக் கொள்ள முடியாதவாறு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உலக நாடுகள் உட்பட இந்தியாவில் கூட இந்த விவகாரம் தொடர்பாக செயற்பாட்டு ரீதியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எமது மாணவர்களை இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக ஒரு பாட அலகையாவது நாம் உள்ளடக்க வேண்டும். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here