பதுளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த சீனப் பிரஜை உயி­ரி­ழப்பு

0
41


Published by T. Saranya on 2020-01-30 12:18:13

பதுளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

பது­ளை–­ப­சறை பிர­தான வீதியின் இரண்டாம் மைல் கல்­ல­ருகே வசித்­து­வந்த வோன் சீமன் என்ற 69 வய­து­டைய நபரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்ட நிலையில் இவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். இது குறித்து பதுளை அர­சினர் மருத்­து­வ­மனை பிரதி வைத்­திய அதி­காரி டாக்டர் ரன்ஜித் அம­ர­கோ­னிடம் வின­வி­ய­போது,

“கடந்த 27ஆம் திகதி மேற்­படி நபர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இந்­நபர் சீன இனத்தைச் சார்ந்­த­வ­ராக இருந்­தாலும் நீண்­ட ­கா­ல­மாக பது­ளையில் வசித்­து­வந்­த­துடன், இப்­ப­குதி பெண்­ணொ­ரு­வ­ரையே திரு­ம­ணமும் செய்­தி­ருந்தார்.

இவ­ரது மர­ணத்­தை­ய­டுத்து எவரும் வீணாக பீதியும், பதற்றமும் அடையத் தேவையில்லை. எனினும் மரணமானவரின் சடலம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here