கசிப்பு உற்பத்தில் ஈடுப்பட்ட இருவர் கைது

0
30


ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த  சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கசிப்பு  ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை முறியடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு 70 லீற்றர் கசிப்பு, சுமார் ஆயிரம் லீற்றர் கோடா, வெற்றுத் தகரங்கள், கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here