இரத்து செய்யப்பட்டுள்ள ஜெனீவா மோட்டார் கண்காட்சி!

0
32


கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக உலகின் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த உலகின் மிகப்பெரிய மோட்டார் கண்காட்சியான ‘The Geneva Motor Show’ இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் கண்காட்சியானது மார்ச் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகி இருவாரங்களுக்கு இடம்பெறவிருந்தது. இந் நிகழ்வில் 660,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

அவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏனைய நாடுகளிலிருந்து ஜெனீவாவுக்கு வருவை தருபவர்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 15 ஆம் திகதி வரை 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் எந்தவொரு பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதன் காரணமாகவே ஜெனீவா மோட்டார் கண்காட்சியானது இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அகற்றப்பட்ட சர்வதேச நிகழ்வுகளின் வரிசையில் இந்த நிகழ்ச்சி சமீபத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo credit : CNN

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here